shadow

அதிமுகவுக்கு கவுண்டமணி, தினகரனுக்கு செந்தில் பிரச்சாரமா?

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில் கோலிவுட் திரையுலகினர்களும் பிரச்சாரத்தில் குதிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் முதல்வர் ஈபிஎஸ் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர் என்பதால் அதே மண்டலத்தை சேர்ந்த கவுண்டமணி அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வார் என்ற வதந்தி சிலநிமிடங்களாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இதுகுறித்து கவுண்டமணி விளக்கமளித்ததாவது: நான் எந்தக் கட்சியையும் சாராதவன், ஆர்.கே.நகரில் ஒரு குறிப்பிட்ட கட்சியை ஆதரித்து நான் பிரசாரம் செய்யப்போவதாக பரப்பப்படும் தகவல்களில் எந்த உண்மையும் இல்லை’ என்று கூறியுள்ளார்.

கவுண்டமணி பிரச்சாரம் செய்யப்போவதில்லை என்று கூறிய நிலையில் அவருடன் பல திரைப்படங்களில் நடித்த நடிகர் செந்தில் தினகரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வார் என்று கூறப்படுகிறது.

Leave a Reply