shadow

அதிபர் ராபர்ட் முகாபே ராஜினாமா: முடிவுக்கு வந்த 37 ஆண்டுகால ஆட்சி

ஆப்பிரிக்க கண்டத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள கண்டம் ஜிம்பாப்வே. இதன் அதிபராக பதவி வகித்து வந்தவர் ராபர்ட் முகாபே. இவர் கடந்த 1980ல் அதிபராக பதவி ஏற்றார். இதையடுத்து 37 ஆண்டுகளுக்கு தொடர்ந்து ஆட்சி நடத்தி வந்தார்.

ஆனால் மோசமான பொருளாதார நிலைமை, அரசின் ஊழல் ஆகியவற்றால் மக்கள் கொந்தளித்தனர். பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. ராணுவத்தினரும் அதிபருக்கு எதிராக கிளம்பியது. உடனே ராபர்ட் முகாபே வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார்.

கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டார். அதிபர் பதவியை ராஜினாமா செய்ய காலக்கெடு வழங்கப்பட்டது. இதற்கிடையில் தொலைக்காட்சியில் தோன்றிய அவர், விரைவில் கட்சிக் கூட்டம் ஒன்றை நடத்த உள்ளதாக தெரிவித்தார்.

பதவி விலகுவதற்கான காலக்கெடு முடிந்ததால், அதிபரை அகற்றுவதற்கான பணிகள் தொடங்கின. ஆனால் அதற்குள் தனது ராஜினாமா கடிதத்தை, நாடாளுமன்ற சபாநாயகருக்கு ராபர்ட் முகாபே அளித்துள்ளார். இதனால் ஜிம்பாப்வேயில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply