shadow

அதிபர் சிறிசேனாவுக்கு மனநல சோதனை நடத்த வேண்டும்: சரத் பொன்சேகா

சமீபத்தில் இலங்கையில் நடந்த அரசியல் குழப்பம் இன்னும் முடிந்தபாடில்லை. இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரம சிங்கேவை நீக்கி விட்டு முன்னாள் அதிபர் ராஜ பக்சேவை புதிய பிரதமராக சிறிசேனா திடீரென நியமித்தார். ஆனால், ராஜபக்சேவால் பாராளுமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியவில்லை. நீதிமன்றமும் அவர் பிரதமர் பதவியை தொடர தடை விதித்துள்ளது.

இந்த நிலையில் அதிபர் சிறிசேனாவின் இக்கட்டான நிலை குறித்து இலங்கையின் முன்னணி அரசியல்வாதி சரத் பொன்சேகா கூறியதாவது:-

அதிபர் சிறிசேனா இரவில் ஒன்று பேசுகிறார். விடிந்ததும் வேறு ஒன்றை பேசுகிறார். அவருடைய மனநிலை பாதித்து விட்டது. பைத்தியக்காரர் போல் நடந்து கொள்கிறார். அமெரிக்கா போன்ற நாடுகளில் அதிபர், அரசு தலைவர்கள் மற்றும் ராணுவ தளபதிகள் பதவி ஏற்பதற்கு முன்பு மனநிலை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று விதிகள் இருக்கிறது. அதே போல் இலங்கையிலும் கொண்டு வர வேண்டும். தேவைப்பட்டால் அதிபர் சிறிசேனா 2 வாரம் மனநல ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வரலாம்.

இதற்கு தேவை என்றால் சட்ட திருத்தங்களை கூட உருவாக்கலாம். சிறிசேனா தொடர்ந்து அரசியல் சாசன சட்டத்தை மீறி வருகிறார். என்னை அதிபர் ஆக்கி இருந்தால் இது போன்று ஒரு போதும் நடந்து கொள்ள மாட்டேன். அரசியல் சட்டத்தை மீற மாட்டேன். யாரோ எழுதி கொடுத்த புத்தகத்தை ஜனாதிபதி தாத்தா என்ற பெயரில் தனது பேத்தியை வைத்து வெளியிடுகிறார். அப்படிப்பட்ட நபர் தான் இங்கு அதிபராக இருக்கிறார்.

இவ்வாறு பொன்சேகா கூறினார்.

 

Leave a Reply