shadow

அடிலெய்ட் டெஸ்ட்: இந்தியாவின் ஸ்கோரை நெருங்கிய ஆஸ்திரேலியா

அடெலெய்டில் இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி சற்றுமுன் வரை 96 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்து 30 ரன்கள் பின் தங்கியுள்ளது

இன்று காலை 3வது ஆட்டம் ஆரம்பித்த சில நிமிடங்களில் மழை குறுக்கிட்டதால் ஒருசில நிமிடங்கள் ஆட்டம் தடைபட்டது. அதன்பின்னர் மீண்டும் ஆட்டம் தொடங்கிய நிலையில் ஆஸ்திரேலிய அணி 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இன்னும் சில நிமிடங்களில் இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கவுள்ளது.

இந்திய அணியின் அஸ்வின், பும்ரா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களையும், முகமது ஷமி, இஷாந்த் சர்மா தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

இந்தியா, ஆஸ்திரேலியா, கிரிக்கெட் , டெஸ்ட், ரன்கள்

Leave a Reply