அஞ்சலியுடன் டூயட் பாட தயாராகிய யோகிபாபு

நடிகை அஞ்சலி நடித்த ‘லிசா’ படத்தில் யோகிபாபு காமெடி வேடத்தில் நடித்திருப்பார் என்பது தெரிந்ததே. தற்போது நடிகை அஞ்சலியை விரட்டி விரட்டி காதலிக்கும் ஒரு கேரக்டரில் யோகிபாபு நடிக்கவுள்ளாராம்

ஏற்கனவே நயன்தாரா நடித்த ‘கோலமாவு கோகிலா’ திரைப்படத்தில் நயன்தாராவை ஒருதலையாக காதலிக்கும் கேரக்டரில் நடித்த யோகிபாபு தற்போது அஞ்சலியுடன் ஒரு டூயட் பாடலை பாடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

இந்த படத்தில் அஞ்சலி பேஸ்கட்பால் வீராங்கனை மற்றும் பயிற்சியாளர் கேரக்டரில் நடிப்பதாகவும் இந்த் படத்தை இயக்குனர் கிருஷ்ணன் என்பவர் இயக்கவிருப்பதாகவும் தெரிகிறது. இவர் ஏற்கனவே ‘சொன்னா புரியாது’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply