அஜித் பாணியில் களமிறங்கும் த்ரிஷா?

அமிதாப் நடித்த ‘பிங்க்’ ரீமேக் படத்தில் தல அஜித் நடித்து வரும் நிலையில் அதேபோல் அமிதாப் நடித்த இன்னொரு படத்தின் தமிழ் ரீமேக்கில் த்ரிஷா நடிக்கவுள்ளார்.

அமிதாப் நடித்த மற்றொரு வெற்றிப்படமான ‘பாட்லா’ என்ற இந்திப்படம் தமிழில் ரீமேக் செய்யப்படவுள்ளது இந்த படத்தில் டாப்சி நடித்த முக்கிய வேடத்தில் நடிக்க த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

அதேபோல் அமிதாப் வேடத்தில் நடிக்கவும் ஒரு முன்னணி நடிகரிடம் பேச்சுவார்த்தை நடந்து முடிந்துவிட்டதாகவும் தெரிகிறது. இந்தியில் சுஜாய் கோஷ் இயக்கிய இந்த படத்தை தமிழில் முன்னணி இயக்குனர் ஒருவர் இயக்கவுள்ளார்.

Leave a Reply