’அஜித் திராவிட முன்னேற்ற கழகம்’ போஸ்டரால் மதுரையில் பரபரப்பு

ஏற்கனவே அதிமுக என்ற கட்சியை அஜித் திமுக’ என்று நெட்டிசன்கள் கூறி வரும் நிலையில் தற்போது உண்மையிலேயே ‘அஜித் திராவிட முன்னேற்ற கழகம்’ என்ற ஒரு கட்சி ஆரம்பிக்கப்பட்டதாக மதுரையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

அஜித்துக்கும் அரசியலுக்கும் ரொம்ப தூரம் என்றாலும் அரசியல்வாதிகள் ஒருசிலர் அவ்வப்போது அஜித்தை அரசிலுக்கு வருமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று மதுரையில் திடீரென ‘அஜித் திராவிட முன்னேற்ற கழகம்’ என்ற ஒரு கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போஸ்டர்கள் முளைத்துள்ளது

இந்த போஸ்டரில் எம்ஜிஆரும், அஜித்தும் இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது உண்மையிலேயே கட்சிதானா? அல்லது அஜித் ரசிகர்கள் பரபரப்பை ஏற்படுத்துவதற்காக அடித்த போஸ்டரா? என்பது தெரியவில்லை

Leave a Reply