அஜித் டுவிட்டருக்கு வரவேண்டும்: இலட்சக்கணக்கில் வந்த அழைப்புகள்

தல அஜித் டிவிட்டர் உள்பட எந்த ஒரு சமூக வலைதளத்திலும் இல்லை என்பது தெரிந்ததே. இருப்பினும் அவரது படங்கள் குறித்த செய்தியோ அல்லது அவர் குறித்த தகவல்களோ டிவிட்டரில் வெளி வராத நாளே இல்லை என்று கூறலாம். டுவிட்டர் இணையதளமே கிட்டத்தட்ட அஜித் ரசிகர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது குறிப்பிடதக்கது

அஜித் குறித்து யாராவது குறை சொல்லும் வகையில் பேட்டி அளித்தாலோ அல்லது தகவல் தெரிவித்தாலோ, அந்த நபரை உண்டு இல்லை என அஜித் ரசிகர்கள் செய்து விடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அஜீத் டுவிட்டருக்கு வர வேண்டும் என்றும் டுவிட்டரில் அவர் கணக்கு தொடங்க வேண்டும் என்றும் டுவிட்டர் இந்தியாவின் மேனேஜிங் டைரக்டர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இதனை அடுத்து அஜித் டுவிட்டருக்கு வர வேண்டும் என அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரமுகர்களும் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதுகுறித்த ஹேஷ்டேக் ஒரு சில மணி நேரத்தில் ஆயிரக்கணக்கில் இலட்சக்கணக்கில் டுவிட்டுகள் குவிந்துள்ளது. இந்த அன்பு அழைப்பை ஏற்று அஜித் டுவிட்டரில் கணக்கு தொடங்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply