shadow

அஜித்-சிவா கூட்டணி மீண்டும் உறுதி: ஆக்சனுக்கு பதில் செண்டிமெண்ட்?

அஜித் – சிவா கூட்டணியில் ‘வீரம்’, ‘வேதாளம்’ மற்றும் ‘விவேகம்’ ஆகிய மூன்று படங்களுமே நல்ல வசூலை கொடுத்துள்ள நிலையில் தற்போது இந்த கூட்டணி 4வது முறையாக இணையவுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித்தின் அடுத்த படத்தை ஷங்கர் இயக்குவதாக கூறப்பட்ட நிலையில் ஷங்கர் தற்போது ‘2.0’ படத்தின் போஸ்ட் புரடொக்சன் பணியில் பிசியாக உள்ளார். அவரால் இப்போது அடுத்த படம் குறித்து சிந்திக்கவே நேரம் இல்லை

இந்த நிலையில் அஜித்தின் படத்தை இயக்க சிவா தயாராகிவிட்டதாகவும், இந்த படம் வரும் ஜனவரியில் தொடங்கி தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த படத்தில் ஆக்சனுக்கு இடமில்லை என்றும், இதுவொரு முழுக்க முழுக்க செண்டிமெண்ட் கலந்த குடும்பப்படம் என்றும் கூறப்படுகிறது

Leave a Reply