பரபரப்பு தகவல்
விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தை இயக்கியுள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கமலஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்க இருந்ததாக கூறப்பட்டது
ஆனால் இந்த படம் தற்போது கைவிடப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது மேலும் கார்த்தி நடிப்பில் உருவாகவுள்ள கைதி 2 படத்தை இயக்குவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி அஜித்தின் அடுத்த படத்தை இயக்க இருப்பதாகவும் அஜீத்து அவர் கதை கூறி இருப்பதாகவும், அந்த கதை அஜித்துக்கு பிடித்து விட்டதால் அவரை இயக்குனராக முடிவு செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது
வலிமை படத்தை முடித்தவுடன் அஜித், லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிப்பார் என்றும் இந்தப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.