‘அக்கா எனக்கு அப்டேட் வேண்டும்’: தளபதி 63 தயாரிப்பாளரிடம் தங்கை கோரிக்கை

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ‘தளபதி 63’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வரும் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்த நாளின்போது வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இதுகுறித்த அப்டேட் தனக்கு வேண்டும் என்று இந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதியிடம் அவரது தங்கை டுவீட் மூலம் கேட்டுள்ளார்.

உடன்பிறந்த தங்கைக்காகவாவது ‘தளபதி 63’ குறித்த அப்டேட்டை அக்கா அர்ச்சனா வெளியிடுவாரா? என்று விஜய் ரசிகர்களும் டுவீட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர்.

விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், இந்துஜா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வெளிவரவுள்ளது.

 

Leave a Reply