shadow

அகில இந்திய அளவிலான திறனாய்வுத் தேர்வு: ராஜபாளையம் ராம்கோ ஐ.டி.ஐ மாணவர் முதலிடம்

10ராஜபாளையம்: அகில இந்திய அளவிலான ஐ.டி.ஐ மாணவர்களுக்கான திறனாய்வுத்தேர்வில் ராஜபாளையம் ராம்கோ ஐ.டி.ஐ மாணவர் முதலிடத்தில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.

ராஜபாளையம் ராம்கோ ஐ.டி.ஐ யில் எலக்ட்ரீசியன் பிரிவில் பயிலும் மாணவர் எம்.விக்னேஷ் கடந்த 2015 மே மாதம் சென்னை கிண்டி சென்ட்ரல் டிரைனிங் இன்ஸ்டிடியூட் யில் நடந்த திறனாய்வுத்தேர்வில் பங்கேற்றார்.இவர் முதலிடத்தில் தேர்ச்சி பெற்றார்.

இவருக்கு ரூ50ஆயிரம் ரொக்கப்பரிசும்,அகில இந்தய அளவிலான சிறந்த மாணவருக்கான சான்றிதழும்,இவர் பயின்ற ஐ.டி.ஐ க்கு சிறந்த தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழும் டெல்லி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் ஜெனரலால் இத் துறை சார்பில் நடைபெறஉள்ள விழாவில் வழங்கப்பட உள்ளது.

திறனாய்வு ஊக்குவித்தல் மற்றும் தொழில் முனைவோர் மத்திய அமைச்சகம் சார்பில் கடந்த ஜூலை மாதம் டெல்லியில் நடந்த திறனாய்வுத்தேர்வில் மாணவர் எம்.விக்னேஷ் முதலிடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

இவருக்கு மத்திய அமைச்சர் ஸ்ரீராஜீவ் பிரதாப் ரூடி பாராட்டி சான்றிதழ் வழங்கி கெüரவித்தார்.இந்த தேர்வில் வெற்றி பெற்றதற்காக மாணவர் எம்.விக்ணேஷ்க்கு திறனாய்வு ஊக்குவித்தல் மற்றும் தொழில் முனைவோர் மத்திய அமைச்சகம் சார்பில் ரூ ஒரு லட்சம் ரொக்கப்பரிசு இத் துறை சார்பில் நடைபெறும் விழாவில் வழங்கப்படஉள்ளது.

இந்த மாணவரை வெள்ளிக்கிழமை பயிற்சி நிலையத்தலைவர் பி.ஆர்.ராமசுப்பிரமணியராஜா,தாளாளர் என்.கே.ராமசுவாமிராஜா பாராட்டி கெüரவித்து ராம்கோசிமெண்ட் ஆலையில் பணிபுரிவதற்கான ஆணையும் வழங்கப்பட்டது.

Leave a Reply