shadow

ஃபேஸ்புக் மார்க் தங்கைக்கு செக்ஸ் டார்ச்சர்: கண்டுகொள்ளாத விமான நிறுவனம்

உலகின் முன்னணி சமூக வலைத்தளமான பேஸ்புக் நிறுவனரான மார்க் ஸூகர்பெர்க்கின் சகோதரியும் பேஸ்புக் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகியுமான ரண்டி ஸூகர்பெர்க் சமீபத்தில் தனக்கு விமானத்தில் நடந்த மோசமான அனுபவம் குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதுமட்டுமின்றி இதுகுறித்டு அவர் சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்திற்கும் புகார் கடிதம் அனுப்பி உள்ளார். அந்த புகாரில் ரண்டி கூறியிருப்பதாவது:

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து மெக்சிகோவின் மசட்லான் நகருக்கு அலாஸ்கா விமானத்தில் பயணம் செய்தேன். அப்போது என் இருக்கைக்கு அருகில் அமர்ந்து பயணம் செய்த நபர், என்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டார்.

குடிபோதையில் இருந்த அந்த நபர் பாலியல் தொடர்பாகவும் ஆபாசமாகவும் பேசியதுடன், விமானத்தில் இருந்த மற்ற பெண் பயணிகளின் அங்க அசைவு குறித்தும் வர்ணித்தார்.

இதுபற்றி விமான பணியாளர்களிடம் புகார் கூறினேன். ஆனால் அந்த நபர் வழக்கமாக அந்த வழித்தடத்தில் பயணம் செய்பவர் என்பதால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தனிப்பட்ட முறையில் இதனை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கூறியதுடன், எனது இருக்கையை பின்புறம் மாற்ற முன்வந்தனர். பாதிக்கப்பட்ட நான் ஏன் வேறு இருக்கைக்கு மாற வேண்டும்?

இவ்வாறு ரண்டி ஸூகர்பெர்க் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளார்.

//www.facebook.com/photo.php?fbid=10104252140827491&set=a.616059824011.2209273.4617&type=3&theater

Leave a Reply