​திமுக தலைவராக கருணாநிதி பொறுப்பேற்று 48 ஆண்டுகள் நிறைவு!

​திமுக தலைவராக கருணாநிதி பொறுப்பேற்று 48 ஆண்டுகள் நிறைவு!

karunanidhiதிமுக தலைவராக மு.கருணாநிதி பொறுப்பேற்று இன்றுடன் 48 ஆண்டுகள் முடிவடைவதை அடுத்து கட்சியினர் அவருக்கு தொடர்ந்து வாழ்த்து தெரிவித்தவண்ணம் உள்ளனர்.

கடந்த 1969ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா திடீரென மரணம் அடைந்ததை அடுத்து திமுக தலைவராக இதே ஜூலை 29ஆம் தேதி பொறுப்பேற்றார். அவர் திமுக தலைவர் பணியில் தொடரந்து 48 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.

இதனை அடுத்து கட்சியின் மூத்த தலைவர்களும் தொண்டர்களும் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திமுக பொதுச்செயலாளர் அன்பழகன், கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியை நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அதே போல் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்ட திமுகவின் முக்கிய பிரமுகர்களும் கருணாநிதியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

ஒரு அரசியல் கட்சிக்கு தொடர்ந்து 48 ஆண்டுகாலம் தலைவராக இருந்த சாதனை புரிந்த கருணாநிதிக்கு மாற்றுக்கட்சியை சேர்ந்தவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply