shadow

ஹேக்கர்கள் கைவரிசையால் பாகிஸ்தான் இணையதளம் முடங்கியது!

காஷ்மீர் மாநில புல்வாமா தாக்குதலையடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான பூசல்கள் அதிகரித்து வரும் நிலையில் இருநாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சகங்கள் சார்பில் இவ்விவகாரம் தொடர்பாக எடுக்கப்படும் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? என்பதை அறிந்துகொள்ள உலக நாடுகள் ஆவலுடன் உள்ளன.

இந்த நிலையில், பாகிஸ்தான் அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தை ‘ஹேக்கர்கள்’ முடக்கியதால் வெளிநாடுகளில் இருந்து இந்த இணையதளத்தை பிறர் தொடர்புகொள்ள முடியாத நிலை நேற்று ஏற்பட்டது.

இந்த முடக்கத்துக்கு இந்தியாவை பாகிஸ்தான் பத்திரிகைகள் குற்றம்சாட்டியுள்ளது. இந்த குறைபாட்டை சீர்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன’ என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் முஹம்மது பைசல் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *