shadow

ஹேக்கர்களுக்கு ரூ.65 லட்சம் ஊபேர் நிறுவனம் பணம் கொடுத்தது ஏன்? அதிர்ச்சி தகவல்

உலகம் முழுவதும் கிளைகளை வைத்துள்ள பிரபல கால்டாக்சி நிருவனமான ஊபெர் கார் நிறுவனத்தின் முக்கிய தகவல்கள் ஹேக்கர்களால் திருடப்பட்டதாகவும், அந்த தகவல்களை அழிக்க ஹேக்கர்களுக்கு அந்நிறுவனம் ரூ.65 லட்சம் பணம் கொடுத்ததாகவும் தெரியவந்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஊபெர் கார் நிறுவனத்தின் உலக அளவிலான வாடிக்கையாளர்கள் 5 கோடியே 70 லட்சம் மற்றும் ஓட்டுநர்களின் தகவல்கள் திருடப்பட்டதை அந்நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரி ((Dara Khosrowshahi)) தாரா கோஸ்ரோவ்ஷாஹி ஒத்துக்கொண்டுள்ளார்.

திருடப்பட்ட தகவல்களை அழிக்கவும் வெளியே கசியவிடாமல் இருக்கவும் இந்திய மதிப்பில் 65 லட்சம் ரூபாய் ஊபர் நிறுவனத்தால் ஹேக்கர்களுக்கு கொடுக்கப்பட்டதாகவும், இந்த தகவல்கள் வெளியே தெரியாமல் அப்போது மறைக்கப்பட்டதாகவும் கோஸ்ரோவ்ஷாஹி தெரிவித்துள்ளார். இனி இதுபோல் நடக்காமல் டிஜிட்டல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்

Leave a Reply