ஹெல்மெட் அணியாமல் சென்ற காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்

ஹெல்மெட் அணியாமல் 2 சக்கர வாகனத்தில் சென்ற காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மாம்பலம் காவல் உதவி ஆய்வாளர் மதன் என்பவர் ஹெல்மெட் அணியாமல் 2 சக்கர வாகனத்தில் சென்றதாக காவலர் செயலியில் புகைப்படத்துடன் புகார் ஒன்று பதிவானது

இதனையடுத்து மதனை பணியிடை நீக்கம் செய்து இணை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். காவலர் செயலியில் புகைப்படத்துடன் வந்த புகாரை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

Leave a Reply