ஹெல்மெட் அணியாமல் சென்றால் வாகனங்கள் பறிமுதல்: உயர்நீதிமன்றம் அதிரடி

#தமிழகத்தில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என நீதிமன்ற உத்தரவு இருந்தும் அதனை பெரும்பாலானோர் கடைபிடிப்பதில்லை. இந்த நிலையில் இதுகுறித்த வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தபோது, ‘ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ஏன் ரத்து செய்ய கூடாது என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஹெல்மெட் அணியாதது தொடர்பாக 4 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல் அளித்த நிலையில் இனிமேல் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களில் ஒருவர் கூட ஹெல்மெட் அணியவில்லை என்றும், ஹெல்மெட் அணியாமல் வாகன ஓட்டிகள் செல்வதற்கு எதிரான வழக்கில் நீதிபதிகள் சரமாரி கேள்வி கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

Leave a Reply