ஹெல்மெட்டுக்கு இதைவிட சிறந்த புரமோ வேண்டுமா? வைரலாகும் வீடியோ!

ஹெல்மெட்டுக்கு இதைவிட சிறந்த புரமோ வேண்டுமா? வைரலாகும் வீடியோ!

இருசக்கர வாகன ஓட்டிகளும் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கண்டிப்பாக ஹெல்மெட் போட வேண்டும் என சென்னை ஐகோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது

இந்த உத்தரவை கடுமையாக பின்பற்ற வேண்டும் என போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளும் அறிவுறுத்தி வருகின்றனர்.
இதனை மீறுபவர்கள் அபராதம் உள்பட ஒரு சில விதங்களில் தண்டிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகக்து

இந்த நிலையில் ஹெல்மெட் என்ற பெயரில் ப்ளாஸ்டிக் டப்பாக்களை ஒரு சிலர் போட்டு போலீசாரை ஏமாற்றி வருவது தெரியவந்தது

இதனை அடுத்து ஹெல்மெட் தரமானதுதானா என்பதை சோதனை செய்யும் பணியிலும் போக்குவரத்து காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்

இந்த நிலையில் ஹெல்மெட்டுக்கு இதை விட ஒரு பெரிய புரோமோ இருக்க முடியாது என்று சமூக வளைதளத்தில் ஒரு வீடியோ வைரலாகியுள்ளது

அந்த வீடியோவில் கார் ஒன்றில் போதும் இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் படுபயங்கரமான தரையில் மோதுகிறார். ஆனால் அவர் தலையில் நல்ல தரமான ஹெல்மெட் போட்டு இருந்தால் எந்தவித சிறு காயமும் இன்றி எழுந்து நிற்கிறார்

அந்த நேரத்தில் அவரது மோட்டார் சைக்கிள் டெலிபோன் கம்பத்தில் மோதியதால் அந்த டெலிபோன் கம்பம் கீழே விழுந்து அவரது தலை மேல் மீண்டும் விழுகிறது

அப்படியும் அந்த இளைஞருக்கு எந்தவித காயமும் இன்றி உடனே திரும்பவும் எழுந்தியிருக்கின்றார். ஒரு தரமான ஹெல்மெட் ஒரு இளைஞரை அடுத்த அடுத்த சில வினாடிகளில் இரண்டு முறை காப்பாற்றி உள்ளது என்பதற்கு இதை விட வேறு சான்று தேவையில்லை என்பதால் இந்த வீடியோவை அனைவரும் வைரலாக்கி புரமோஷன் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published.