ஹெச்.ராஜா பேசினால், காந்திக்கு கூட கோபம் வரும்: டிடிவி தினகரன்

ஹெச்.ராஜா பேசினால், காந்திக்கு கூட கோபம் வரும்: டிடிவி தினகரன்

நாடாளுமன்ற தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்துள்ள நிலையில் அதிமுக, திமுக என இரண்டு கூட்டணிக்கும் சவாலாக இருந்து வருகிறார் டிடிவி தினகரன். அதிமுக, திமுகவை மட்டுமின்றி நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர் பாஜகவையும் விமர்சனம் செய்து வருகிறார்.

அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற இடைத்தேர்தல் அமமுக வேட்பாளர் மாரியப்பன் கென்னடி, சிவகங்கை நாடாளுமன்ற வேட்பாளர் தேர்போகி பாண்டி ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அமமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் பேசியதாவது:

40 சுயேட்சைகளும் இந்தியாவின் பிரதமரை தீர்மானித்தார்கள் என்ற வரலாற்று சாதனையை நீங்கள் எங்களுக்கு உருவாக்கி தர வேண்டும். சிவகங்கை நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா பேசினால், காந்திக்கு கூட கோபம் வரும். அவர் தனது நாக்கில் பெட்ரோல் ஊற்றி உள்ளார் என்று பேசினார்.

Leave a Reply