ஹீரோ டைட்டில் யாருக்கு? விஜய்-சிவகார்த்திகேயன் பலப்பரிட்சை

ஹீரோ டைட்டில் யாருக்கு? விஜய்-சிவகார்த்திகேயன் பலப்பரிட்சை

‘காக்கா முட்டை’, குற்றமே தண்டனை போன்ற படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதிய எழுத்தாளர் ஆனந்த் அண்ணாமலை இயக்கும் முதல் படத்திற்கு ‘ஹீரோ’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ‘நோட்டா’ புகழ் விஜய் தேவரகொண்டா இந்த படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் உருவாகவுள்ளது

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கும் படத்திற்கும் ‘ஹீரோ’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதில் கூத்து என்னவெனில் இரண்டு தரப்பினர்களிடம் பணத்தை வாங்கி ‘ஹீரோ’ டைட்டிலுக்கு தயாரிப்பாளர் சங்கம் அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

எனவே ஒரே நேரத்தில் இரண்டு நடிகர்களின் படங்கள் ஒரே டைட்டிலில் உருவானால் குழப்பம் ஏற்படும் என்பதால் யாராவது ஒருவர் டைட்டிலை விட்டுக்கொடுக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் இதுகுறித்த முடிவு விரைவில் எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply