ஸ்ரீரங்கத்தில் ஆடிபுரம் திருவிழா: ராஜகோபாலன் கோவிலில் இந்த ஆண்டுக்கான அலங்காரம் நடைபெற்றது வருகிறது

கொரோனா வைரஸ் காரணமாக கோவில்கள் மூடப்படும் நிலையில் ஸ்ரீ ரெங்கநாதம் கோவில் ஆடிப்பூரம் திருவிழா நடந்தது.கோவில்கள் மூடப்பட்டுள்ளதால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆடிப்பூரத்திருவிழா 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் ரெங்கநாதருக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்று வருகிறது
ஆடிப்பூர உற்சவத்தின் 3-வது நாளான 4-ம்தேதி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபத நாதர் சன்னதியில் உள்ள கண்ணாடி அறையில் மூலவர் ஆண்டாளுக்கு திருப்பாற்கடல்நாதன் அலங்காரமும், உற்சவருக்கு கண்ணன் ஆண்டாளின் சிற்றில் சிதைத்தல் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.

ஆண்டாள் திரு ஆடிப்பூர உற்சவத்தின் 4-ம் நாளான 5-ம்தேதி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபதநாதர் சன்னதியில் உள்ள கண்ணாடி அறையில் மூலவர் ஆண்டாளுக்கு பரமஸ்வாமி அலங்காரமும், உற்சவருக்கு கள்ளழகர் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.

ஆண்டாள் திரு ஆடிப்பூர உற்சவத்தின் 8-ம் நாளான நேற்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபத நாதர் சன்னதியில் உள்ள கண்ணாடி அறையில் மூலவர் ஆண்டாளுக்கு ராஜகோபாலன் அலங்காரமும், உற்சவருக்கு ஸ்ரீ ராமர்-அகல்யா சாப விமோசனம் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.

இந்த விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.

இந்த நிகழ்ச்சியை இணையதளத்தில் கண்டுகளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.