ஸ்ரீநகரில் தடுத்து நிறுத்தப்பட்ட காங்கிரஸ் பிரமுகர்: பெரும் பரபரப்பு

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு உடனே டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்தான நிலையில் காங்கிரஸ் பிரமுகர் குலாம் நபி ஆசாத் அங்குள்ள நிலவரங்களை ஆராயவும், அம்மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுடன் விவாதிக்கவும் இன்று ஸ்ரீநகர் சென்றிருந்தார். விமான நிலையத்தில் இறங்கியவுடன் ஸ்ரீநகருக்குள் செல்ல தயாராக இருந்த குலாம் நபி ஆசாத் மற்றும் ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் குலாம் அகமத் மிர் ஆகியோர் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்

ஸ்ரீநகரில் 144 தடை உத்தரவு இருக்கும் நிலையில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் இதையடுத்து குலாம் நபி ஆசாத் டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

Leave a Reply