ஸ்ரீதேவி, சாவித்திரி கேரக்டர்களில் நடிக்கும் பிரபல நடிகைகள்

ஸ்ரீதேவி, சாவித்திரி கேரக்டர்களில் நடிக்கும் பிரபல நடிகைகள்

தெலுங்கு திரையுலகின் முதுபெரும் கலைஞராகவும், ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வராகவும் இருந்த என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாக உருவாக்கப்பட்டு வருகிறது.

மறைந்த நடிகர் என்.டி.ஆர் கதாபாத்திரத்தில் அவரது மகன் பாலகிருஷ்ணா நடித்து வருகிறார். மேலும் என்.டி.ஆர் மனைவி கதாபாத்திரத்தில் வித்யா பாலன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

திரை வாழ்க்கையோடு தொடங்கி என்.டி.ஆரின் அரசியல் வாழ்க்கையும் இப்படத்தில் பதிவு செய்யப்படவுள்ளது. என்.டி.ஆர் ஹீரோவாக இருந்த காலத்தில் அவருடன் சாவித்திரி மற்றும் ஸ்ரீதேவி இருவரும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

இந்நிலையில் சாவித்திரி கதாபாத்திரத்தில், நடிகையர் திலகம் படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத்சிங் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

தெலுங்கு மற்றும் தமிழில் வெளிவரும் என்.டி.ஆர் வாழ்க்கை வரலாற்று படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

கிர்ஷ் ஜகர்முடி இயக்கும் இந்த படத்தை என்.டி.ஆர்-ஆக நடித்து வரும் பாலாகிருஷ்ணா சொந்தமாக தயாரித்து வருகிறார். விரைவில் இந்த படத்திற்கு என்.டி.ஆர் என்றே தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply