ஸ்பைடர், கருப்பனை முந்தியது அடல்ட் காமெடி படம்

ஸ்பைடர், கருப்பனை முந்தியது அடல்ட் காமெடி படம்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிப்பில் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட ‘ஸ்பைடர்’ படத்தையும், விஜய்சேதுபதியின் ‘கருப்பன்’ படத்தையும் வசூல் அளவில் சிறிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட கவுதம் கார்த்திக்கின் அடல்ட் காமெடி படமான ‘ஹரஹர மகாதேவகி’ திரைப்படம் முந்திவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

‘ஹரஹர மகாதேவகி’ திரைப்படம் கடந்த 29ஆம் தேதி ரிலீஸ் ஆகி சென்னையில் மட்டும் நேற்றுவரை ரூ.1,32,95,516 வசூல் செய்துள்ளது. கடந்த வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் மட்டும் ரூ.51,64,392 வசூல் செய்துள்ளது.

ஆனால் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘ஸ்பைடர்’ திரைப்படம் கடந்த வாரயிறுதி நாட்களில் சென்னையில் ரூ.50,85,165 மட்டுமே வசூல் செய்துள்ளது. அதேபோல் கருப்பன் திரைப்படம் ரூ.47,45,756 மட்டுமே வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply