ஸ்டாலின் போராட்டமும் குரங்கு கதையும்: எச்.ராஜாவின் டுவீட்

திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த திமுக எம்பிக்களின் போராட்டம் நடந்ததா? நடைபெறவில்லையா? என்று சந்தேகம் ஏற்படுவதுபோல் அதுகுறித்த செய்திகள் பெரியதாக ஊடகங்களில் வெளிவரவில்லை. பெரும்பாலான ஊடகங்கள் ப.சிதம்பரம் குறித்த செய்திகளுக்கே முக்கியத்துவம் தருகின்றன.

இந்த நிலையில் எச்.ராஜா தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: குரங்குக்கு முன்னாடி கஞ்சி கலையத்தை வைத்தால் அது கை வைக்காது. குட்டியோட வால விட்டு பார்க்கும். குட்டி கத்தினா கஞ்சி சூடா இருக்கு என்று குரங்கு கை வைக்காது. இல்லேனா குரங்கு கஞ்சிய குடிக்க துவங்கும். இதுக்கும் டில்லி ஜந்தர் மந்தரில் ஸ்டாலின் அறிவிச்ச போராட்டத்திற்கும் தொடர்பில்லை

எச்.ராஜாவின் நக்கலான இந்த டுவீட் குறித்து நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்பதை கமெண்ட் பகுதியில் பதிவு செய்யவும்

Leave a Reply