ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்கவில்லை: சந்திரசேகர ராவ் மகள் விளக்கம்
திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்டு, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தரப்பில் அணுகவில்லை என தெலங்கானா ராஷ்ட்டிர சமிதி எம்.பியும் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அவர்களின் மகளுமான கவிதா விளக்கம் அளித்துள்ளார்.
திமுக தலைவர் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் வரும் 13ஆம் தேதி சந்திக்கவிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அவர்களுக்கு ஸ்டாலின் நேரம் ஒதுக்கவில்லை என திமுக தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது
இந்த நிலையில் ஸ்டாலினை சந்திக்க தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தரப்பில் இருந்து நேரம் கேட்கவில்லை என தெலுங்கானா ராஷ்ட்டிர சமிதி கட்சியின் தரப்பில் இருந்து தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது