ஸ்டாலினை அடிக்க மாட்டோம், அதற்கு பதிலாக இதனை செய்வோம்: ஹெச்.ராஜா

ஸ்டாலினை அடிக்க மாட்டோம், அதற்கு பதிலாக இதனை செய்வோம்: ஹெச்.ராஜா

திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ’தமிழகத்துக்கு நல்லாட்சி விருது அளித்தவர்களை அடிக்க வேண்டும்’ என்று பேசியுள்ளார்

இது குறித்து கருத்து கூறிய பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா அவர்கள் கூறியபோது ’ஸ்டாலின் அவர்கள் தொடர்ந்து வன்முறையை தூண்டும் விதத்தில், கலவரத்தை தூண்டும் விதத்தில் பேசி வருவதை நான் சுட்டிக் காட்டி வன்மையாக கண்டித்து வந்து கொண்டிருக்கிறேன்

தற்போது மேலும் ’நல்லாட்சி விருது கொடுத்தவர்களை அடிக்க வேண்டும் என்று கூறியிருப்பது வன்முறையைத் தூண்டுவது போல் உள்ளது. இதனால்தான் வில்சன் படுகொலை போன்றவை நடந்தது. சிஏஏவுக்கு ஆதரவாக ஓட்டுப் போட்டதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பி ஒருவர் தாக்கப்பட்டு உள்ளார். எனவே அவர்களை நான் எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன்

தொடர்ந்து வன்முறையை மத்திய அரசுக்கு எதிராக தூண்டிவிட்டு கொண்டு இருந்தால் உங்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும். நான் உங்களை அடிப்பேன் என்று சொல்லமாட்டேன் அதுபோன்ற மோசமான வார்த்தையை அவரைப்போல் நானும் பயன்படுத்த மாட்டேன். ஆனால் நிச்சயமாக திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பாரதிய ஜனதா கட்சி தக்க பதிலடி கொடுக்கும் என கூறியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published.