ஷில்பா ஷெட்டி பெற்றோர், கணவருக்கு கொரோனா!

பிரபல பாலிவுட் நடிகையும் தொழிலதிபருமான ஷில்பா ஷெட்டியின் குடும்பத்தினருக்கு கொரோனா பரவியுள்ளது. இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்

ஷில்பா ஷெட்டியின் அம்மா அப்பா கணவர் மற்றும் வீட்டில் பணிபுரியும் இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாகவும் இதனை அடுத்து அனைவரும் ஒவ்வொரு அறையில் தனித்தனியாக தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்

மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் பரவி வருவதால் அனைவரும் கவனமாக இருந்து கொள்ளுங்கள் என்றும் வெளியே செல்லும் போது மாஸ்க் அணிந்து கொண்டு செல்லுங்கள் என்றும் சில்பா செட்டி வலியுறுத்தியுள்ளார்

https://twitter.com/etimes/status/1390593636329398273/photo/2

Leave a Reply