வைரமுத்துவின் காதலர்தின கவிதை: கொண்டாடும் இளைஞர்கள்

திரைப்படங்களில் காதல் பாடல்கள் என்றாலே வைரமுத்து அவர்கள் ஞாபகம் தான் வரும். அந்த அளவிற்கு காதல் மழை சொட்டச் சொட்ட அவர் பல பாடல்களை எழுதியுள்ளார் என்பதும் அந்த பாடல்கள் காதலர்கள் மற்றும் இளைஞர்களிடையே பெரும் புகழ் பெற்றது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இன்றைய காதலர் தினத்தை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு காதல் கவிதையை எழுதியுள்ளார். இந்த காதல் கவிதை தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது

இதோ அந்த காதல் கவிதை”
காதலும் பசியும்
காணாது போயின்
பூதலம் மீது
புதுப்பித்தல் ஏது?

வெற்றியில் தோல்வியாய்
தோல்வியில் வெற்றியாய்ப்
பற்றிடும் காதலே
பற்றுக பற்றுக!

Leave a Reply