வைகோ ஒரு அரசியல் பச்சோந்தி: கே.எஸ்.அழகிரி

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளான காங்கிரஸ் மற்றும் மதிமுக ஆகிய இரு கட்சி தலைவர்களும் ஒருவரை ஒருவர் காரசாரமாக விவாதம் செய்து கொண்டிருக்கும் நிலையில் திமுக அதனை வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

காஷ்மீர் விஷயத்தில் காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டதாக வைகோ கூற, அதற்கு பதிலடியாக ‘வைகோ எம்பி ஆனதே காங்கிரஸ் எம்.எல்.ஏக்களால்தான், அவர்தான் முதல் துரோகி என்று பதிலடி கொடுத்தார்.

இதனையடுத்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ‘அரசியல் பச்சோந்தி என்பதை வைகோ நிரூபித்துள்ளார் என்றும், வைகோ தனது அரசியல் வாழ்வில் யாருக்கும் விசுவாசமாக இருக்க மாட்டார் என்றும் கூறியுள்ளார். இருதரப்பினர்களும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply