வைகோவை எம்.பி.யாக பதவியேற்க அனுமதிக்க கூடாது: சசிகலா புஷ்பா எம்.பி

வைகோவை எம்.பி.யாக பதவியேற்க அனுமதிக்க கூடாது: சசிகலா புஷ்பா எம்.பி

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, போட்டி இல்லாததால் அவர் எம்பியாக விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளார்.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் வைகோவின் கர்ஜனை பாராளுமன்றத்தில் ஒலிக்கவுள்ள நிலையில் அவரை பதவியேற்க அனுமதிக்க கூடாது என அதிமுக எம்பி சசிகலா புஷ்பா துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய அரசு, பிரதமர் மோடிக்கு எதிராக வைகோ பேசி வருவதாகவும், அதனால் நாடாளுமன்றத்தில் எம்.பி.யாக வைகோவை பதவியேற்க அனுமதிக்க கூடாது என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply