வைகோதான் நம்பர் ஒன் துரோகி: ஈவிகேஎஸ் இளங்கோவன்

தமிழகத்தில் கடந்த மக்களவைத் தேர்தலின்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் மதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் இருந்தன. ஒரே கூட்டணியில் இருந்த இரண்டு கட்சிகள் ஒருவரை ஒருவர் திடீரென விமர்சனம் செய்து கொள்வது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சமீபத்தில் ராஜ்யசபா எம்பி என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் குறித்து கடுமையான விமர்சனம் செய்தார். காஷ்மீர் விவகாரத்தில் முதல் குற்றவாளி காங்கிரஸ்தான் என்றும், இரண்டாவது குற்றவாளி தான் பாஜக என்றும் அவர் தெரிவித்தார்

திமுக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தயவில் ராஜ்யசபா எம்பி என வைகோ, காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனம் செய்தது காங்கிரஸ் கட்சி தரப்பில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்கள் கூறும்போது ‘காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவில் எம்பியான வைகோதான் நம்பர் ஒன் துரோகி என்று கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார்.

Leave a Reply