வேளான் பட்ஜெட் முழு விவரம்

தமிழக சட்டப் பேரவையில் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

இன்று இரண்டாவது சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. இதில் தமிழக அரசின் தனி வேளாண் பட்ஜெட் தற்போது தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் 273 பக்கங்கள் கொண்ட வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்

வேளான் பட்ஜெட் சிறப்பம்சம்

ஒரு குவிண்டால் சன்னரகத்திற்கு குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.70 லிருந்து ரூ.100 ஆக உயர்த்தப்படும்.

அதேபோல ஒரு குவிண்டால் நெல் சன்னரகம் ரூ.2,060 க்கும் மற்றும் சாதாரண ரகம் ரூ.2,015 க்கும் கொள்முதல் செய்யப்படும்

கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு வரப்படும் நெல் மூட்டைகள், மழையில் நனைந்து வீணாவதைத் தடுக்க ரூ.52.02 கோடியில் விவசாயிகளுக்கு தார்ப்பாய்கள் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

விவசாயத்துக்கான இலவச மின்சார திட்டத்துக்கு மின் வாரியத்துக்கு ரூ.4,508.23 கோடி நிதி வழங்கப்படும்.

சூரிய சக்தி பம்பு செட்டுகளுக்கான மானிய திட்டம் ரூ.114.68 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

சூரிய சக்தியால் இயங்கும் 5000 பம்பு செட்டுகள் 70% மானியத்தில் நடப்பு ஆண்டில் நிறுவப்படும்.

கரும்பின் பிழிதிறனை அதிகரிக்கும் வகையில் சிறப்பு திட்டத்திற்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு. கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூ.42.50 வழங்கப்படும்.

இந்தாண்டு விவசாயிகளுக்கு மின்சாரம் தர மின்சார வாரியத்திற்கு ரூ.4,508.23 கோடி ஒதுக்கீடு.

பனை மேம்பாட்டு இயக்கம் ரூ.3 கோடியில் செயல்படுத்தப்படும்.

பனை மரங்கள் வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயம்.

தமிழ்நாட்டில் பனைமர வளர்ப்பை அதிகரிக்க 30 மாவட்டங்களில் புதிய திட்டம். பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகப்பதற்காக 36 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகளும், ஒரு லட்சம் மரக்கன்றுகளும் முழு மானியத்தில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பனங்கருப்பட்டி காய்ச்சும் நவீன இயந்திரம் கொள்முதல் செய்திட மானியம் வழங்கப்படும்.

2020-21 நிதியாண்டில் ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கான ஊக்கத்தொகைக்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு.

தரிசு நிலங்களை மாற்றிட குளங்கள், பண்ணை குட்டைகள், கசிவுநீர் குட்டைகள் போன்ற நீர் ஆதாரங்கள் பெருக்கப்படும்.