வேல்முருகனை வெளியேற்றியது மக்களா? பிக்பாஸா?

பிக்பாஸ் வீட்டில் இருந்து நாமினேஷன் செய்யப்பட்டவர்கள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் குறைந்த வாக்குகள் பெற்றவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

ஆனால் உண்மையில் வாக்குகள் அடிப்படையில் தான் வெளியேற்றுகிறார்கள் அல்லது பிக்பாஸ் குழுவினர்கள் எடுத்த முடிவில் அடிப்படையில் வெளியேறுகிறார்களா? என்பது 3 சீசன் களிலும் புரியாத புதிராக இருந்தது

இந்த நிலையில் ஓரளவு டாஸ்க்கிலும் ஈடுபட்டு பாட்டு பாடி மக்களை மகிழ்வித்து வந்த வேல்முருகன் இந்த வாரம் வெளியேறி உள்ளார்

ஆனால் முதல் நாள் முதல் இன்றுவரை எந்தவித ஈர்ப்பும் இல்லாமல் அமைதியாக இருக்கும் ஆஜித்துக்கு தான் குறைந்த வாக்குகள் கிடைத்ததாகவும் ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி குழுவினர் அதற்கு பதிலாக வேல்முருகனை வெளியேற்றி உள்ளதாகவும் தகவல்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது

எனவே வேல்முருகனை வெளியேற்றியது மக்களா? அல்லது பிக்பாஸ் குழுவினர்களா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published.