வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க புதிய ஏற்பாடு: தமிழக அரசு அறிவிப்பு

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை புதுப்பிக்க தவறியவர்கள் மீண்டும் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

ஆன்லைன் மூலம் மூன்று மாதங்களுக்குள் புதுப்பிக்க தவறியவர்கள் புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும் மூன்று மாதங்களுக்குப் பின்னர் புதுப்பிக்க முடியாது என்றும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

2017 ஜனவரி 1ஆம் தேதிக்கு முன்னர் புதுப்பிக்க தவறியவர்களுக்கு இந்த வசதி கிடையாது என்றும் அறிவித்துள்ளது. இந்த வாய்ப்பினை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்கத் தவறியவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது