வேலூர் தேர்தல்: வெற்றி தேடித்தந்த தலைவருக்கு வாழ்த்துக்கள் கூறிய உதயநிதி

வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் வென்ற தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றுள்ள நிலையில் அவருக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இந்த வெற்றிக்கு காரணமாக திமுக தலைவருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:

வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் வென்ற தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த்
வாழ்த்துகள். வெற்றியைத் தேடித்தந்த தலைவர் முக ஸ்டாலின்
அவர்கள், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், களத்தில் உழைத்த கழக நிர்வாகிகள், தொண்டர்கள், இளைஞரணி தோழர்களுக்கும் வாழ்த்துகள். வெற்றியை கலைஞருக்குச் சமர்ப்பிப்போம்.

Leave a Reply