வேலூர் தேர்தல்: திமுக வெற்றி என அறிவிப்பு

வேலூர் மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது

வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,78,855 வாக்குகளும், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் 4,70,395 வாக்குகளும் பெற்றனர். வாக்கு வித்தியாசம் 8460 ஆகும்.

வாணியம்பாடி, வேலூர், ஆம்பூர் ஆகிய தொகுதிகளில் திமுகவுக்கு அதிக வாக்குகளும் அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம் ஆகிய தொகுதிகளில் அதிமுகவுக்கு அதிக வாக்குகளும் கிடைத்துள்ளது. வாணியம்பாடி தொகுதியில் அதிமுகவை விட திமுகவுக்கு சுமார் 30 ஆயிரம் வாக்குகள் அதிகம் கிடைத்ததே திமுகவின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply