வேலூரில் இன்று தேர்தல்: பலத்த பாதுகாப்பு

கடந்த மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது அதிகளவு பணம் சிக்கியதால், வேலூர் மக்களவை தொகுதியில் மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக நீடித்த தேர்தல் பிரசாரம், சனிக்கிழமை மாலையுடன் ஓய்ந்தது.

இதையடுத்து, இன்று காலை 7 மணிக்கு வேலூர் தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பதிவாகும் வாக்குகள் வரும் 9ஆம் தேதி எண்ணப்படுகின்றன. இன்று தேர்தல் நடைபெறுவதை அடுத்து வேலூர் தொகுதி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

Leave a Reply