வேதாரண்யத்தில் அமைதி திரும்புகிறது! பேருந்துகள் இயக்கம்

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதால் பெரும் பதட்டம் நிலவி வந்த நிலையில் தற்போது அங்கு மெல்ல மெல்ல அமைதி திரும்புவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

சேதமான அம்பேத்கர் சிலைக்கு பதில் மாற்றுச்சிலை மற்றும் வன்முறையில் ஈடுபட்டவர்கள் கைது ஆகிய நடவடிக்கையால் இந்த அமைதி திரும்பியுள்ளது

மேலும் வேதாரண்யத்தில் பதற்றம் தணிந்ததை அடுத்து பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், இயல்பு வாழ்க்கை திரும்பி வருவதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன,.

Leave a Reply