வரும் பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களை அறிவிப்பதில் தமிழக அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றனர். அதிமுக வேட்பாளர்களை முடிவு செய்துவிட்டதாகவும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கபடும் என்று அக்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுகவில் 40 இடங்களுக்கும் போட்டியிட விருப்ப மனு பெறப்பட்டது. இதில் தென்சென்னையில் நடிகை குஷ்பு தேர்தலில் நிற்க அனுமதி கேட்டுள்ளார். அவருக்கு கண்டிப்பாக அந்த தொகுதி கிடைக்கும் என கூறப்படுகிறது.

கூட்டணி கட்சிகளுக்கு வழங்கியது போக திமுக இந்த தேர்தலில் 25 தொகுதிகளில் தனது வேட்பாளர்களை நிறுத்தும் என கூறப்படுகிறது.

சேகர்பாபு வடசென்னையிலும், தென்சென்னையில் குஷ்புவும், மத்திய சென்னையில் தயாநிதி மாறனும் தேர்தலில் நிற்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நீலகிரி தொகுதியில் ஆ.ராசாவும், தென்காசி தொகுதியில் டாக்டர் கிருஷ்ணசாமியின் மகள் டாக்டர் சங்கீதாவும் நிற்கலாம் என தெரிகிறது.

Leave a Reply