வெவ்வேறு நிறுவனத்தின் தடுப்பூசிகளை ஒரே நபர் போடலாமா?

இரண்டு வெவ்வேறு நிறுவனத்தின் தடுப்பூசிகளை ஒரே நபர் போடலாமா என்பதற்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது

முதல் டோஸ் ஒருவகை தடுப்பூசியும் இரண்டாவது டோஸ் இன்னொருவகை தடுப்பூசி போட்டாலும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய அரசின் தடுப்பூசி நிபுணர் விளக்கமளித்துள்ளார்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல் மற்றும் இரண்டாவது டோஸ் வெவ்வேறு நிறுவனங்களின் தடுப்பூசி போட்டவர்களுக்கு எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என்றும் எனவே இரண்டு டோஸ்கள் வெவ்வேறு தடுப்பூசிகள் போட்டாலும் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அதனால் பயப்படத் தேவையில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது