வெள்ளியன்று திறக்கப்பட்ட கோவில்கள்: வடபழனியில் குவிந்த பக்தர்கள்!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெள்ளி சனி ஞாயிறு ஆகிய மூன்று நாட்களும் கோவில்கள் திறக்கப்படாத நிலையில் இன்று முதல் அந்த கட்டுப்பாடு தளர்க்கப்பட்டது.

எனவே இன்று வெள்ளிக்கிழமை நீண்ட நாட்களுக்கு பிறகு கோவில்கள் திறக்கப்பட்டுள்ளதால் அதிகாலையிலேயே பக்தர்கள் கோவில்களில் குவிந்துள்ளனர்.

குறிப்பாக இன்று அதிகாலையிலேயே சென்னை வடபழனி கோவிலில் பக்தர்கள் குவிந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.