வெளிவந்தது 1971 துக்ளக்: ரஜினி சொன்னது அனைத்தும் உண்மையா?

வெளிவந்தது 1971 துக்ளக்: ரஜினி சொன்னது அனைத்தும் உண்மையா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் நடைபெற்ற துக்ளக் விழாவில் கடந்த 1971ம் ஆண்டு நடந்த பெரியார் நடத்திய ஊர்வலம் ஒன்றில் ராமர் மற்றும் சீதை படங்கள் நிர்வாணமாக கொண்டு செல்லப்பட்டதாகவும் அவற்றில் செருப்பு மாலை போட்டு இருப்பதாகவும் கூறியிருந்தார்

ரஜினிகாந்த் இல்லாத ஒன்றை, நடக்காத ஒன்றை கூறுவதாக அனைத்து கட்சி தலைவர்களும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி 1971ஆம் ஆண்டு துக்ளக் மீண்டும் பிரசுரிக்க உள்ளதாக தெரிவித்து இருந்தார்

இந்த நிலையில் சமூக ஊடகங்களில் 1971ஆம் ஆண்டு வெளிவந்த துக்ளக் இதழின் கட்டுரை மற்றும் புகைப்படங்கள் வந்துள்ளன. இதில் ரஜினி கூறியது அனைத்தும் உண்மை என்பது கட்டுரை மூலமும் அதில் வெளியாகி உள்ள படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இதற்கு பெரியார் ஆதரவாளர்கள் என்ன பதில் கூறுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply