வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற 500 பேர் மருத்துவ பணியை தொடங்க அனுமதி

வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற 500 பேர் மருத்துவ பணியை தொடங்க அனுமதி அளித்து
தமிழக சுகாதாரத் துறை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் ஏற்கனவே இருந்த இரண்டு விதிகளையும் தளர்த்தி தமிழக அரசு நடவடிக்கை

தமிழகத்தில் பயிற்சிபெறும் வகையில், ஓராண்டு பணி புரிந்த பின்பே மருத்துவ பணி என்ற விதி இருந்தது. வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்கள் பயிற்சியின்போது 5 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது விதி. இந்த இரண்டு விதிகளும் தளர்த்தப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மருத்துவர்கள் தேவை கருதி தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.