வெற்றி நூலகம்: இந்தியரை வலம் வரும் கணிதப் பரிசுகள்

வெற்றி நூலகம்: இந்தியரை வலம் வரும் கணிதப் பரிசுகள்

bookகணிதம் எத்தனை சுவாரஸ்யமானது என்பதை எளிமையாகப் புரிந்துகொள்ள விருப்பமா? உலகை வியக்கவைத்த சமன்பாடுகள், பல நூறு ஆண்டுகளாகத் தீர்வு காண முடியாத புதிர்கள், கணிதத்தில் சாதனை படைப்பவர்களுக்கு வழங்கப்படும் பரிசுகள், பரிசுகளை வென்றெடுத்த இந்தியர்கள் இப்படியான செய்திகளைக் கணித ஆசிரியர்களையும், மாணவர்களையும் ஆர்வலர்களையும் ஈர்க்கும் விதமாகத் தந்திருக்கும் நூல்.

இந்தியரை வலம் வரும் கணிதப் பரிசுகள்
நல்லாமூர் கோவி. பழனி
வனிதா பதிப்பகம், 11, நானா தெரு, பாண்டிபஜார்,
(தலைமை அஞ்சலகத்தை ஒட்டிய தெரு)
தி.நகர், சென்னை 600 017. போன்: 044 – 42070663

சொந்த ஊரில் உள்ள குலசாமியின் திருவிழாவுக்குப் போவது சிலருக்கு அஞ்ஞானமாகக்கூட இருக்கலாம். ஆனால், விஞ்ஞானத் தேடல் உள்ளவருக்குக் குலசாமி கோயில் பூசாரியின் வார்த்தைகளுக்குள்ளும் வரலாறு இருக்கிறது. அந்த வரலாறு தரும் நினைவுகளை ஆப்பிரிக்காவிலிருந்து மனிதர்கள் உலகெங்கும் பரவி வளர்ச்சியடைந்த விஞ்ஞானத் தேடலுடனும் அவரால் இணைக்கமுடியும் என்பதை நிரூபிக்கிறார் நூலாசிரியர் பாலமுருகன். மத்திய அரசின் உயரதிகாரியான அவர் வரலாறு, மானுடவியல், தொழில்நுட்பம், மனிதரில் கருப்பர்,வெள்ளையர் உருவான விஞ்ஞானக் கருத்துகள் எனத் தனது பல்துறை அறிவை எளிமையான ஆங்கிலத்தில் பேச்சுமொழி நடையில் நம்முன் வைக்கிறார். அவர் சொல்லும் முறை எவரையும் கவர்ந்திழுக்கும். மாணவர்கள் படிக்க வேண்டிய நூல்.

THE PURPOSE OF ALL PURPOSES
பாலமுருகன் கலியமூர்த்தி
சம்யுக்தா பதிப்பகம்,
1/51, பெருமாள்கோயில் தெரு,
ஸ்வர்ணபுரி, சேலம்- 636004.
தொடர்புக்கு:9443232633.

அரசுத் துறைகளில் மக்களின் அன்றாட வாழ்க்கையோடு மிக நெருங்கிய தொடர்புடையது வருவாய்த் துறை. அனைத்து வகை நிலநிர்வாகம், வரிவசூல் எனப் பல நிர்வாகப் பணிகள் அதில் அடக்கம். இத்துறையில் விஏஓ எனப்படும் கிராம நிர்வாக அலுவலர் வேலைப் பெற நினைப்பவர்கள் அதற்குத் தயாராகப் படிக்க வேண்டிய புத்தகம்.

பொக்கிஷம், கிராம நிர்வாக அலுவலரின் கடமைகள் மற்றும் பணிகள்,
வடகரை செல்வராஜ்,
ரேவதி பப்ளிகேஷன்ஸ்,
புது எண்.76, பழைய எண்.27/1,
பாரதீஸ்வரர் காலனி,
2வது தெரு, கோடம்பாக்கம்,
சென்னை 600 024. செல்: 99412 01410

இந்திய ராணுவ வீரர் எனச் சொல்லும்போதே பெருமிதம் குரலில் எழுகிறதல்லவா! அத்தகைய ராணுவ வீரர் ஆவது எப்படி? தரைப்படை, கப்பல் படை, விமானப் படை நிர்வாகம் என்ன?, இந்திய ராணுவ வரலாற்றில் முக்கியத் தருணங்களை விரிவாக எடுத்துரைக்கும் புத்தகம்.

நமது இந்திய ராணுவம்
ஆர்.சி.சம்பத்
அருணா பப்ளிகேஷன்ஸ்
12, முதல் தெரு, (அனெக்ஸ்), வடக்கு ஜகன்னாத நகர்,
வில்லிவாக்கம், சென்னை 600 049, போன்: 044 – 2650 7131

Leave a Reply

Your email address will not be published.