வெற்றிமாறன் படத்தில் மீண்டும் இணையும் திரையுலக பிரபலம்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த அசுரன் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம், பொல்லாதவன், விசாரணை போன்ற படங்களிலும் ஜிவி பிரகாஷ் தான் இசையமைத்து இருந்தார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் சூர்யா நடிக்கும் அடுத்த படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளார் என்று அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் இந்தப் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க உள்ளார் என்பதும் தெரிந்ததே. தற்போது இந்த படத்திற்கும் ஜிவி பிரகாஷ் தான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் கசிந்து வருகிறது

இந்த நிலையில் சற்று முன்னர் ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று மாலை 4மணிக்கு தான் இசையமைக்க ஒப்புக் கொண்டுள்ள ஒரு மிகப்பெரிய படம் குறித்த அறிவிப்பை வெளியிடுவதாக தெரிவித்துள்ளார். சூர்யா-வெற்றி படத்தை தான் ஜிவி பிரகாஷ் குறிப்பிட்டு உள்ளார் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன

Leave a Reply