வெற்றிமாறன்-சூர்யாவின் வாடிவாசல் டிராப்பா?

அதிர்ச்சித் தகவல்

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாக இருக்கும் வாடிவாசல் என்ற திரைப்படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிகாரபூர்வமாக வெளிவந்தது

இந்த நிலையில் இந்த படம் எதிர்பாராத ஒரு சில காரணங்களால் டிராப் செய்யப்பட்டுவிட்டதாக சமூக வலைதளங்களில் கூறப்பட்டது

மேலும் வாடிவாசல் படத்தில் சூர்யாவுக்கு பதிலாக படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாகவும் சமூகவலைதள பதிவு ஒன்று கூறுகிறது

ஆனால் இந்த பதிவு வெற்றிமாறனின் போலி டிவிட்டர் அக்கவுண்ட் என்றும் இந்த தகவலை யாரும் நம்பவேண்டாம் என்றும் வெற்றிமாறன்-சூர்யா இணையும் வாடிவாசல் திரைப்படம் கண்டிப்பாக உருவாகும் என்றும் வெற்றிமாறன் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது

மேலும் பிரபலங்களின் பெயரில் போலி அக்கவுண்ட் உருவாக்கி அதில் போலியான தகவல்களை பரப்பி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சூர்யா ரசிகர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இதோ இதுதான் வெற்றிமாறன் பெயரில் இருக்கும் போலி டுவிட்டர் அக்கவுண்ட்

Leave a Reply