வெற்றிடத்தை நிரப்ப ரஜினி எங்களுக்கு தேவையில்லை: பாஜக பிரமுகர்

வெற்றிடத்தை நிரப்ப ரஜினி எங்களுக்கு தேவையில்லை: பாஜக பிரமுகர்

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப வெளியில் இருந்து எங்களுக்கு ஆட்கள் தேவை இல்லை என்றும், பாஜகவிலேயே வெற்றிடத்தை நிரப்ப ஆட்கள் இருக்கிறார்கள் என்றும் தமிழக பாஜக பொருளாளர் எஸ்ஆர் சேகர் அவர்கள் தெரிவித்துள்ளார்

ரஜினியின் அரசியல் வருகை வெற்றிடத்தை நிரப்பும் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் வெற்றிடத்தை நிரப்ப வெளியிலிருந்து எந்த ஸ்பெஷலிஸ்ட்டையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றும் கேள்வி ஒன்றுக்கு எஸ்ஆர் சேகர் பதிலளித்தார்

தமிழகத்தில் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி மறைவிற்குப் பின்னர் ஆளுமையுள்ள தலைவர் பதவிக்கு வெற்றிடம் இருப்பதாக ரஜினிகாந்த் கடந்த இரண்டு ஆண்டுகளாக கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

ஆனால் அந்த வெற்றிடத்தை எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நிரப்பிவிட்டதாக அதிமுகவினரும் முக ஸ்டாலின் அவர்கள் நிரப்பி விட்டதாக திமுகவினரும் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply