வெட்டவெளி புல்வெளி தரையில் வகுப்புகள்: கொரோனாவால் மாற்றம்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆறு மாதங்களாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி தற்போது ஒவ்வொன்றாகத் திறக்கப்பட்டு வருகின்றன

அந்த வகையில் திரிபுரா மாநிலத்தில் நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது வகுப்பறைகளில் நடத்தினால் பாதுகாப்பு இல்லை என்பதற்காக வெட்டவெளியில் சமூக இடைவெளியுடன் மாணவ மாணவிகள் உட்கார வைக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன

இந்த முறைக்கு அம்மாநில மக்கள் பெரும் ஆதரவு தந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது மாணவ மாணவர்களும் பாதுகாப்பாக இருப்பதை உணர்கின்றனர் 

Leave a Reply